இந்தியா வருகிறார் உசைன் போல்ட்

புதுடில்லி: ஒலிம்பிக் தடகளத்தில் 8 தங்கம் வென்ற 'மின்னல்' மனிதன் உசைன் போல்ட், இந்தியா வருகிறார்.
ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் 38. தடகளத்தில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் உலக சாதனையாளர். ஒலிம்பிக் அரங்கில் 8 தங்கம் கைப்பற்றியுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். கடந்த 2014ல் இந்தியா வந்துள்ள இவர், 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார்.
தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். வரும் செப் 26-28ல் இந்தியா வரும் உசைன் போல்ட், டில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல உள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில்,'' இந்தியாவுக்கு மீண்டும் வரவுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் பாசம், விளையாட்டு மீது வைத்துள்ள ஆர்வம், உண்மையில் ஒப்பிட முடியாதது. இந்தியாவில் எனக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். செப்டம்பர் மாதம் இந்தியா செல்ல உள்ளது ஆர்வத்தை அதிகரிக்கிறது,'' என்றார்.

Advertisement