நிலஅளவை அலுவலர்கள் வேலைநிறுத்தம் துவக்கம்

7


மதுரை : மதுரையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அமைப்பினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் போராட்டத்தை துவக்கினர்.

களப்பணியாளர் பணிச்சுமையை குறைக்க வேண்டும், தரம் இறக்கிய குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும், நிலஅளவைத் துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.



நேற்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம் துவங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கிளைத் தலைவர் சிவா வரவேற்றார். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மாவட்டச் செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் முகைதீன் அப்துல்காதர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நீதிராஜா, சாலைப்பணியாளர் சங்க பொருளாளர் தமிழ் உட்பட பலர் பேசினர். கோட்ட கிளைத்தலைவர் பெருமாயி நன்றி கூறினார். மாவட்டத்தில் 11 தாலுகாக்களிலும் பலர் 'ஆப்சென்ட்' ஆனதால் பணிகள் பாதித்தன.

Advertisement