இங்கிலாந்து அணி அறிவிப்பு * சோயப் விலகல்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பஷிர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், ஜூலை 23ல் மான்செஸ்டரில் துவங்குகிறது.
இதற்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. லார்ட்ஸ் டெஸ்டில் இடது கை சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷிர், மீதமுள்ள தொடரில் இருந்து விலகினார். அடுத்த சில நாளில் இவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது.
இவருக்குப் பதில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் 35, சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசியாக 2017ல் டெஸ்டில் பங்கேற்ற இவர், உள்ளூர் தொடரில் ஹாம்ப்சயர் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2023, 2024 என தொடர்ந்து இருமுறை ஆண்டின் சிறந்த வீரராக தேர்வானார். தவிர, சாம் குக், ஓவர்டன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அணி விபரம்: ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஆர்ச்சர், அட்கின்சன், பெத்தெல், ஹாரி புரூக், கார்ஸ், கிராவ்லே, லியாம் டாசன், டக்கெட், போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க், வோக்ஸ்.
மேலும்
-
கடலுார் - சென்னை சரக்கு கப்பல் அக்டோபரில் சேவை துவக்கம்
-
சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை கேரள டாக்டர் தம்பதிக்கு 'டிமாண்ட்'
-
பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு
-
ஒடிஷாவில் தீக்குளித்த மாணவி மரணம்: எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு
-
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது: என்.எஸ்.சி.என்.,
-
சமோசாவுக்கு எச்சரிக்கை மத்திய அரசு மறுப்பு