கடலுார் - சென்னை சரக்கு கப்பல் அக்டோபரில் சேவை துவக்கம்

சென்னை: கடலுார் - சென்னை இடையே, கன்டெய்னர் சரக்கு கப்பல் சேவை, வரும் அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளது.
கடலுார் துறைமுகம், 111 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் உரங்கள், நிலக்கரி போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால், நடுக்கடலில் கப்பல்கள் நிறுத்தப்படும். சிறிய படகுகள் வாயிலாக, அதில் உள்ள சரக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி, துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டன.
இதற்கிடையில், பல்வேறு காரணங்களால் துறைமுகத்தின் செயல்பாடு முடங்கியது. கடலுார் துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, 'மஹதி கடலுார் போர்ட் அண்ட் மேரிடைம்' என்ற தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.
அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமீபத்தில் கையெழுத்தானது.
தற்போது, கடலுார் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு, கன்டெய்னர் சரக்கு கப்பல் இயக்குவது குறித்து, தமிழக அரசுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, தனியார் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தினர் கூறியதாவது:
கடலுாரில் துறைமுகத்தில், 150 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, கப்பல் நிறுத்துமிடமான, இரு, 'பர்த்'கள் தயாராக உள்ளன. தற்போது, அடுத்தகட்ட மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள, தனியார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை - புதுச்சேரி இடையே, ஏற்கனவே சரக்கு பெட்டகங்கள் ஏற்றி செல்லும் கப்பல் இயக்கப்படும் நிலையில், இந்த சேவையை கடலுார் துறைமுகத்தில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளோம். கடலுார் துறைமுகம், 9 மீட்டர் ஆழம் உடையது என்பதால், பெரிய கன்டெய்னர் கப்பலை இயக்க முடியும்.
கடலுாரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வாரம்தோறும் இரண்டு சர்வீஸ் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான, முதல்கட்ட பேச்சு நடத்தி உள்ளோம். கடலுாரை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கெமிக்கல், தாதுப் பொருட்கள், மருந்துகள், முந்திரி பொருட்கள், ஆடைகள் கொண்டு செல்ல, இந்த கப்பல் போக்குவரத்து உதவும்; ஏற்றுமதி, இறக்குமதி அதிகளவில் நடக்கும்.
ஒரே நேரத்தில், 5,000 டன் எடை பொருட்களை, எங்களின் சரக்கு கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்
-
பஸ் பயணத்தில் பிரசவம்: குழந்தையை வெளியே வீசி கொன்ற தம்பதி கைது
-
காசாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் வன்முறை: 20 பேர் உயிரிழப்பு
-
அரசு மகப்பேறு மருத்துவமனையின் அவலம்; இதுதான் சிறந்த கட்டமைப்பா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும்; சொல்கிறார் சீமான்
-
கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!