மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் கார்- பைக் மோதி ஏற்பட்ட விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கார்- பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விரைந்தனர். பைக் மற்றும் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து நள்ளிரவு 11.57 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


மேலும்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்