பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் உள்ள, அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் உள்ள, அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக, அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நான்கு மாணவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று பள்ளிக்கு திரும்பினர். சிகிச்சை பெற்று சென்ற மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் டாக்டர்கள் மீண்டும் உடல் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
திடீரென இத்தனை பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன, உணவு, தண்ணீரில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது பற்றி, பள்ளியில் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!