கடலில் மூழ்கி 3 மீனவர்கள் பலி?

உடுப்பி : படகு மீது அலை மோதியதால் தடுமாறி கடலுக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் மூவரும் கடலில் மூழ்கினர்.

உடுப்பி மவட்டம், குந்தாபூரை சேர்ந்த லோஹித் கார்வி, 38, சுரேஷ் கார்வி, 45, ஜெகதீஷ், 43, சந்தோஷ் ஆகியோர் மீன் பிடிக்க நேற்று காலையில் படகில் புறப்பட்டனர்.

காலை முதலே கனமழையுடன் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீண்டும் கரை திரும்பலாம் என்று முடிவு செய்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை, அவர்களின் படகு மீது மோதியதில், லோஹித் கார்வி கடலுக்குள் விழுந்தார்.

அவரை காப்பாற்ற சுரேஷ் கார்வி, ஜெகதீசும் கடலில் குதித்தனர். கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால், மூவரும் மூழ்கினர்.

இந்நேரத்தில் இவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்தது. படகில் இருந்த சந்தோஷ் மட்டும் நீச்சலடித்து கரைக்கு திரும்பி உயிர் தப்பினார்.

உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Advertisement