மாநில அளவிலான கால்பந்து போட்டி: கடலுார் அணி வெற்றி

கடலுார் : தஞ்சாவூரில் நடந்த 12வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கடலுார், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட 16க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இதில் கடலுார் நைசா மற்றும் தஞ்சாவூர் எம்.எஸ்.யுனைடெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அதில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடலுார் நைசா அணி இரண்டாமிடம் பிடித்தது. மூன்றாம் இடத்தை கடலுார் ஏ.ஆர்.எல்.எம். அணி பிடித்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த டிபண்டருக்கான விருது கடலுார் நைசா அணி வீரர், ஹரிஷ் தேவிற்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற வீரர்களை அணி பயிற்சியாளர் செந்தில்குமார், பப்ரு பாலாஜி பாராட்டினர்.

Advertisement