ஆட்டோ டிரைவர் கொலை உறவினர்கள் மறியல்

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா திரளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் 40, அதே பகுதியைச் சேர்ந்த போதுராமன் 60.

கண்மாய்கள், தனியார் இடங்களில் வளர்ந்த கருவேல மரங்களை குத்தகைக்கு எடுத்து வெட்டி விற்பனை செய்யும் தொழிலை இருவரும்செய்து வந்தனர். தொழில்போட்டி காரணமாக ஒரு வாரத்திற்கு முன் தகராறு ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பையும் சேர்ந்த 26 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் பாண்டியராஜன் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி பூங்கொடி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளே படுத்து இருந்தனர்.

அதிகாலை 12:30 மணிக்கு பாண்டியராஜனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது தலையில் அரிவாள்வெட்டு காயத்தோடுஅவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஆத்திரமடைந்த பாண்டியராஜன் தரப்பினர் போதுராமனின் வீட்டு முன்பு இருந்த டூவீலர் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். திருமங்கலம்- சேடப்பட்டி ரோட்டில் மறியலில்ஈடுபட்டனர்.

ஏ.எஸ்.பி., அன்சுல்நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில்போலீசார் குவிக்கப்பட்டனர்.

கொலை செய்தவர்களை திருமங்கலம் தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement