விளையாட்டு மைதானம் இல்லாததால் செயற்கை புல்வெளி அரங்குகள் அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு மைதானம் இல்லாததால், தனியார் செயற்கை புல்வெளி தளம் கொண்ட 'டர்ப்' அரங்குகள் அதிகரித்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாடுவதற்கேற்ப அரசு சார்பில் மைதானம் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் மட்டும் விளையாடி வருகின்றனர். அரசு பள்ளி மைதானம் என்பதால், வெளி நபர்கள் விளையாடுவதற்கு அனுமதிப்பது கிடையாது.
பேட் மிட்டன், நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் மாதந்தோறும் தனியார் கிளப்புகளில் பணம் செலுத்தி விளையாடி வருகின்றனர்.
ஆனால் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவை விளையாட தனி மைதானங்கள் இல்லை. இதை பயன்படுத்தி சிலர் தங்களது சொந்தமான இடத்தை செயற்கை புல் தரை 'டர்ப்' வசதியுடன் கூடிய அரங்குகளாக மாற்றி வருகின்றனர்.
இங்கு, கால்பந்து, கிரிக்கெட் விளையாட போதுமான இட வசதியும், அதற்கான உபகரணங்கள், கழிப்பறை, தண்ணீர் வசதி தயாராக உள்ளது.
விளையாட வரும் நபர்கள் பணம் செலுத்தி முன்பதிவு செய்து, அங்குள்ள பொருட்களை பயன்படுத்தி விளையாடி செல்கின்றனர்.
இது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பது கிடையாது. பணம் உள்ளவர்கள் மட்டுமே விளையாட கூடிய இடமாக உள்ளது.
எனவே, அனைத்து தரப்பு மக்களும், ஏழை எளிய விளையாட்டு வீரர்களும், பள்ளி கல்லுாரி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை புரிய கள்ளக்குறிச்சியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்