பாடிபில்டரை கொல்ல முயன்ற வழக்கு: வாலிபர் கைது
பாகூர் : கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 25; கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது.
கடந்த ஏப்., 1ம் தேதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, புகழேந்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை வெட்டி கொல்ல முயன்றார். இது குறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, புகழேந்தி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஜார்ஜ் பெர்னாண்டசை, தீர்த்து கட்டும் நோக்கில் கத்தியுடன் சுற்றித்திரிந்த புகழேந்தியின் கூட்டாளியான, பிச்சைவீரன்பேட்டை சேர்ந்த மணிகண்டனை, 25, போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, கிருமாம்பாக்கத்தை சேர்ந்த திருக்குமரன், 25; என்பவர், தனது நடவடிக்கைகளை கண்காணித்து, புகழேந்திக்கு தகவல் கூறி வருதாக, ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருதி, அவரை பழித்தீர்க்கும் நோக்கில் இருந்தார்.
கடந்த 14ம் தேதி இரவு கிருமாம்பாக்கம் சோலை வாழியம்மன் கோவில் அருகே நின்றிருந்த திருக்குமரனை, ஜார்ஜ் பெர்னாண்டஸ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ், தீபன், சதீஷ், திலீப் ஆகியோரை தேடி வந்தனர்.
கிருமாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசை நேற்று போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 கத்திகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்