தண்டையார்பேட்டையில் ரூ.11 கோடியில் பணிகள்

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம், தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடந்தது.

வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள், கூட்டத்தில் முறையிட்டனர்.

தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் மழைக்காலங்களில் தேங்கும் நீரை வெளியேற்ற, 8 லட்சம் ரூபாய் செலவில் மின் மோட்டார் வாங்கவேண்டும்.

காசிமேடில் உள்ள ஹிந்து, முஸ்லிம்ஷ கிறிஸ்துவர்களின் மயானம் ஒரு கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் பணிகள் துவங்குவது உள்ளிட்ட, 11 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement