வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி

முகப்பேர்: வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.

முகப்பேர் கிழக்கு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 74. அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல பணிக்கு செல்ல, நேற்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர், முதியவர் ஆனந்தன் மீது மோதியது.

இதில், துாக்கி வீசப்பட்ட முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர், லேசான காயத்துடன் தப்பினார். திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆனந்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய, முகப்பேரைச் சேர்ந்த பாண்டுரங்கன், 61, என்பவரை கைது செய்து, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

Advertisement