கால்நடை தொழுவமாக மாறிய சிறுவர் விளையாட்டு பூங்கா

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா கால்நடைகள் கட்டும் தொழுவமாக மாறியுள்ளது.

காரைக்கால், கோவில்பத்து பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவில் எதிரே குளக்கரை அருகில் சிறுவர் விளையாட்டு பூங்கா பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் சிறுவர் பூங்கா சரியான முறையில் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. சிறுவர்களுக்கு விளையாடும் பூங்காவில் தற்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டி வருகின்றனர்.

மேலும் பூங்காவை சுற்றி கோவில், பள்ளிகள் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் குப்பை கூடாரமாக மாறி வருகிறது. பூங்காவில் உள்ள உஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் சிறுவர் பூங்காவை சீர்செய்து சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement