சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
'கடவுள் மனிதனுள் சுவாசத்தை செலுத்தினார். வாழ்வின் சுவாசத்தை பின் மனிதன் அதை தொடர்ந்து செயல்படுத்துவான் என எதிர்பார்த்தார்' என யோகமகரிஷி கனகானந்த சுவாமிகள் கூறுவார்.
மேலோட்டமான மூச்சு விடும் பழக்கத்தால் ஒரு சாதாரண மனிதன் தன் உடலில் ஏற்படும் சிதை மாற்றத்தைக்கூட நிலை நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. அதற்கும் மேலாக அவன் தன் நுரையீரலுக்குள் இழுத்துக் கொள்ளும் காற்றின் நச்சுத் தன்மையாலும், அசுத்தத்தாலும், அதை உட்கொண்டு அவன் உயிர் வாழ்வதே மேல் என்ற நிலை தோன்றியுள்ளது.
என்றாலும், 'சுவாசமே வாழ்வு'. இவ்வுலகில் யோக விஞ்ஞானம் மட்டும் தான் நீண்ட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படை. நீண்ட சுவாசமே என வலியுறுத்துகின்றது. பிராணாயாமம் சுவாச மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, அத்துடன் காற்று எளிதாக தடையின்றி ஆரோக்கியமாக சுவாச மண்டலத்தில் பிரவேசித்து, அதிலிருந்து நமக்கு மிகுந்த பலமும்,
சக்தியும் அளிக்கவல்லது. உடல் உறுதிபெற்று, வலுவான நேர்மின் சுவாச அலையின் பங்கினைப் பெறும். இந்த வகையான யுக்திகளையே, 'ஹதேனா' என்பர். 'ஹதேனா என்றால் பலப்படுத்தும் நுட்பம் என்று பொருள்.
இந்த யோக நிலைகளின் அடிப்படை விதி, உடலை ஒருவித அமைப்பில் இருத்தி நன்கு இழுத்து மூச்சுவிடுவது தான். இந்த நிலையில் மூச்சு காற்றின் மிகுந்த பகுதியானது, நுரையீரலின் ஒரு பாகத்திற்கு செலுத்தப்பட்டு நீண்டு விரிக்கப்படுகின்றது.
நுரையீரலின் பல்வேறு பாகங்களுக்கு ஏற்றபடி உடலின் நிலைகளை மாற்றி வருவதால் நுரையீரல் முழுவதுமாக நீட்டப்பட்டு விரிவடைகின்றது. அதனால் சுவாச மண்டலம் வலுவடைந்து, மூச்சை இழுக்கும் திறன் அதிகரிக்கிறது.
இதன் மூலம் உதரவிதானம் விரிவடைந்து வலுவடைகிறது. கூடவே விலா எலும்புகளுக்கு நடுவேயுள்ள தசைகளும் விரிவடைகின்றது. மூச்சு குழாய் அழுத்தப்பட்டு விரிவதால், முன் இருந்ததைவிட அதிகமாக நெகிழ்வடைந்து, மொத்த சுவாச உறுப்புகளும் செம்மையாகிறது.
பிராணாயாமத்தை ஹதேனாக்களுடன் இணைக்கப்படுகிறது. அதனை ஆதம் பிராணாயாமம் (கீழ் மார்பு சுவாசம்), மத்யம் பிராணாயாமம் (நடு மார்பு சுவாசம்), ஆத்யம் பிராணாயாமம் (மேல் மார்பு சுவாசம்), மஹாத்யோகபிராணாயாமம் (முழு சுவாசம்) என நான்கு வகைப்படும்.
இந்த ஹதேனாக்கள் சுவாசப் பயிற்சி சுவாசத் திறனை அதிகரிக்கும். இப்பயிற்சியால், சுவாச மண்டலத்தின் பலம், திறன், வலிமை மற்றும் ஆரோக்கியம் கூடுகின்றது. பிராணாயாமம் என்பது சுவாசத்தை அடக்குதல் என்பது மட்டும் பொருளில்லை. 'பிராணன் மீது ஆளுமை' என்பதாகும். பிராணாயாமம் என்பது வாழத் தேவையான சக்தியின் மீது ஆளுமை என்பதாகும்.
சாதாராணமாக ஒருவர் சுவாசிக்கும் போது ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 13 முதல் 20 முறை என ஒரு மணி நேரத்திற்கு 1,000 முறை சுவாசிக்கிறோம்.
அதில், அழுத்தமில்லாத மேலான மூச்சில் 20 க்யூபிக் அங்குல காற்றையும், ஆழ்ந்த சுவாசத்தில் 100 க்யூபிக் அங்குல காற்றையும் சுவாசிக்கிறோம்.
நான்கு வகை பிராணாயாமம் மூலம் நுரையீரலின் மொத்த கொள்ளளவை 100 க்யூபிக் அங்குல அளவிற்கு மாற்றலாம்.
உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அந்த உடலில் 'பிராணவாயு' பற்றாக்குறை ஏற்பட்டால் மரணத்தில் கூட முடியலாம். மருத்துவ ஆய்வில், ஒருவருக்கு வயது கூடும்பொழுது அவரது மூளைக்குச் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவதால் தான் முதிர்ந்த தோற்றம் ஏற்படுகிறது.
எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனமுள்ளவர்கள் சுவாச பயிற்சியை அறிவது அவசியம். மேலும், நீண்ட சுவாச பயிற்சியினால், மன வளம், அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் கிட்டும்.
ஹதேனா பயிற்சிகளில் உள்ள ஆசனங்கள் சுவாச மண்டலத்தின் திறனை அதிகரிப்பதுடன், அதனை வலுவாக்கி விரிவடைய வைக்கிறது.
ஹதேனாக்காளின் வகைகள் மற்றும் அதன் செய்முறைகளை அடுத்தவாரம் காண்போம்...
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு