அடிக்கல் நாட்டு விழா

சாத்துார்: சாத்துார் அருகே ஏழாயிரம் பண்ணை - முத்தாண்டியாபுரம் செல்லும் தார்ரோடு உள்பட அருப்புக் கோட்டை தொகுதிக்குட்பட்ட 8 இடங்களில் ரூ 9 கோடி மதிப்பில் புதிய தார் ரோடு போடும் பணியை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேற்று முத்தாண்டியாபுரத்தில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

முன்னதாக அங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.

Advertisement