காமராஜர் பிறந்த நாள்

ராஜபாளையம் : நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உறவின்முறை தலைவர் வேல்ராஜன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் அழகர் ராஜன் முன்னிலை வகித்தார். உறவின்முறை செயலர் மதி பிரகாசம், உதவி தலைவர் பெரியசாமி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாணவர்கள் ,ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

* பி.ஏ.சி.எம்., பள்ளியில் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கருணாகரன், ஆசிரியர்கள் செல்வகுமார் முத்துராமன் பேசினர். மாணவர்கள் ஊர்வலம், கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

* நகர் காங். சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர் தலைவர் ஆர். சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் பொன் சக்தி மோகன், தளவாய் பாண்டியன், ஏ.டி. சங்கர் கணேஷ் நிர்வாகிகள் டைகர் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement