பயன்பாட்டுக்கு வந்த மின்மாற்றியால் குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீர்வு

உத்திரமேரூர்:மணல்மேடில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இருந்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால், குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் ஊராட்சியில், கன்னிகுளம், புலிவாய், மணல்மேடு, விஜயநகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில், பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தங்களுடைய விளை நிலங்களுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் வெளிவட்ட கிணற்றில் இருந்து, மோட்டார் மூலமாக, வயலுக்கு நீர் பாசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் குறைந்தழுத்த மின் பிரச்னை, அடிக்கடி மின் வெட்டு பிரச்னை ஏற்பட்டு வந்தது. அதனால், கூடுதலாக மின்மாற்றி அமைக்க, விவசாயிகள் மின் வாரியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மின் வாரியத்தினர், மணல்மேடில் கூடுதலாக மின்மாற்றி அமைத்தனர். மின்மாற்றி அமைத்து ஒரு மாதமாகியும் வீடு, விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் இருந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மணல்மேடில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் இருந்து அப்பகுதி வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும்
-
கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்
-
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
-
11 மாவட்டங்களில் இன்று கன மழை
-
ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையில் 5 பேர் கைது
-
மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16
-
'இயல்பைவிட கை விரல் இருப்பதால் பணி நிராகரிக்கக்கூடாது' உயர்நீதிமன்றம் உத்தரவு