ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையில் 5 பேர் கைது

1


ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட வலி நிவாரணியாக பயன்படும் போதை மாத்திரைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.


இலங்கை கடற்படையினர் கல்பிட்டி பகுதியில் உள்ள வெல்லமுண்டலம் கடற்கரைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது ஐந்து பைபர் படகுகளில் ஏற்றி வந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த தமிழகத்தில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.


மாத்திரைகளையும், மூன்று பைபர் படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர், கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ேஹன, வன்னிமுண்டலம், சின்னக்குடுரிப்பு பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.


இவர்களை புத்தளம் கலால் துறை சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.2.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement