கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்

விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சியில் கிராவல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராஜேந்திரபட்டிணம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.

அதில் கிராவல் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடன் நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்ச்செல்வன், 28; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement