கணவனை கொல்ல முயற்சி கள்ளக்காதலனுடன் மனைவி கைது
அரூர், அரூர் அருகே உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து கொடுத்து, கணவனை கொல்ல முயன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியை சேர்ந்தவர் ரசூல், 43. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்முபி, 35. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.
கடந்த, 5ல் இரவு ரசூல் வீட்டில் சாப்பிட்டு விட்டு துாங்கினார். திடீரென நள்ளிரவு, 1:00 மணிக்கு, 2 முறை வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த கம்பவுண்டர் ஒருவருக்கு, மொபைல்போனில், ரசூல் தகவல் தெரிவித்தார். அவர், அதிகாலை, 3:00 மணிக்கு வந்து ரசூலுக்கு ஊசி போட்டு சென்றுள்ளார். அதன்பின், ரசூலுக்கு வயிற்று வலி ஏற்பட்டதுடன், வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த, 11ல் சேலம் தனியார் மருத்துவமனையில் ரசூல் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள், அதில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால், மனைவி மீது சந்தேகமடைந்த ரசூல், தன் தம்பி மனைவி அசினா என்பவரிடம், தன் மனைவியின் மொபைல்போனை சோதனை செய்ய
கூறியுள்ளார்.
அதில், கீரைப்பட்டியில் சலுான் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன், 26, என்பவருடன், அம்முபி, 'வாட்ஸாப்'ல் பேசிய ஆடியோவில், நீ கொடுத்த மருந்தை, கணவருக்கு உணவில் கலந்து கொடுத்தேன், ஒன்றும் ஆகவில்லை.
பின்னர் மாதுளம் பழம் சாறில் கலந்து கொடுத்தேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து ரசூல் புகார் படி, அரூர் போலீசார், நேற்று லோகேஸ்வரன் மற்றும் அம்முபியை கைது செய்தனர்.
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு