பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

அரூர், ஜூலை 1தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 25. இவர், அரூரில் டைலர் கடையில் பணியாற்றிய போது, பிளஸ் 2 படித்து வந்த, 17 வயது மாணவியை ஓராண்டாக காதலித்துள்ளார்.
கடந்தாண்டு, செப்., 8ல் அதிகாலை, 3:00 மணிக்கு குரும்பட்டி முருகர் கோவிலில், ரவிக்குமாரும், மாணவியும் திருமணம் செய்து கொண்டு கோவை சென்றுள்ளனர். பின், ரவிக்குமாரின் ஊருக்கு வந்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து
வந்தனர்.
இதில், மாணவி, 10 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் பிரசவத்திற்கு அனுமதிக்கப் பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் ரவிக்குமார் மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Advertisement