புதிய கட்டடத்திற்கு தபால் ஆபீஸ் மாற்றம்

பாலக்கோடு, தர்மபுரி அருகே, பெரியாம்பட்டியிலுள்ள தபால் அலுவலகம் பெரியாம்பட்டியிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் இருந்தது. இதனால், அங்கு வருவோர் பஸ்சிலிருந்து இறங்கி நடந்தும், ஆட்டோ மூலமும் சென்று வந்தனர். தபால் அலுவலகம் தனியார் கட்டடத்தில் இயங்கியதால், பஸ் நிறுத்தம் அருகே, தபால் நிலையம் வைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று பெரியாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தனியார் கட்டடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், தன் சொந்த செலவில், 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்தி, கணக்கு தொடங்கி உரியவர்களிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில், தபால் நிலைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement