தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:45 மணி முதல் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

தொடர்ந்து, 6:15 முதல், தர்மபுரி மற்றும் அதன் கூற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தர்மபுரி டவுன், பகுதி மற்றும் இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சாலைகள் வெறிச்சோடிய நிலையில், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகனத்தை ஓட்டி சென்றனர். கிராம பகுதிகளில், மானாவாரி விவசாயம் செய்திருந்த விவசாயிகள், கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement