கணவன், மனைவி மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

ஈரோடு, ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அறிவு,37; வெல்டிங் தொழிலாளி. இவர் மனைவி தனம், 35. அறிவு, அதே பகுதியை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும், பழனிசாமியிடம் வட்டிக்கு, 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதை மூன்று மாதங்களுக்கு முன் பஞ்சாயத்து பேசி, தொகையை கொடுத்துள்ளார். கடன் வாங்குவதற்காக கொடுத்த ஆவணங்களையும் பெற்றுள்ளார்.

இதில், பழனிச்சாமிக்கும், அறிவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த, 12 இரவு நல்லி தோட்டம் சக்தி மாரியம்மன் கோவில் பகுதியில் அறிவு மற்றும் அவரது நண்பர் பாலாஜியும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள் ஹரி, சக்தி, சரவணன் ஆகியோர் திடீரென அறிவிடம் தகாத வார்த்தையால் பேசி, பீர் பாட்டிலை எடுத்து தலையில் அடித்தனர். கட்டையால் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அறிவின் மனைவி தனத்தையும் மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர்.
காயம் அடைந்த அறிவு, தனம் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் அறிவு புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement