மின்விளக்கு வசதியில்லாத அனல்மின் நிலைய சாலை

மீஞ்சூர்:வடசென்னை அனல்மின் நிலையம் - எண்ணுார் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல்மின் நிலையங்கள் உள்ளன.
இதன் அருகில் காட்டுபள்ளியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் உள்ளது. மேலும், பெட்ரோலிய முனையங்கள், எரிவாயு நிலையங்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்களும் இப்பகுதியில் உள்ளன.
சென்னை எண்ணுார், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கண்ட நிறுவனங்களுக்கு பணிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் அங்குள்ள எண்ணுார் - வடசென்னை அனல்மின் நிலைய சாலை வழியாக பயணிக்கும் நிலையில், இந்த சாலையில் மின்விளக்கு வசதியில்லை. இதனால் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
இதை பயன்படுத்தி சமூக விரோதிகள், இருசக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்களை மறித்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருந்தும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் இருப்பது தொழிலாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் வடசென்னை அனல்மின் நிலையம் - எண்ணுார் சாலையில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு