போலீசாருக்கு கோர்ட் அறிவுரை குட்கா விற்றவர் விடுவிப்பு
ப.வேலுார், ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணியன் மகன் சக்திவேல், 47; கடந்த, 12ல் இவரது டீக்கடையில், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1,980 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, 12 கிலோ, 825 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு, 19,440 ரூபாயாகும். ப.வேலுார் போலீசார் சக்திவேலை சிறைக்கு அனுப்ப தேவையான எப்.ஐ.ஆர்., மற்றும் மருத்துவ சான்றிதழ்களை பெற்று, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும் என, ப.வேலுார் போலீசாருக்கு பரமத்தி குற்றவியல் நீதிமன்றம் அறிவுரை வழங்கி, டீக்கடை உரிமையாளர் சக்திவேலை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால், ப.வேலுார் போலீசார், சக்திவேலை விடுவித்து அவரிடம் இருந்து கைப்பற்றிய குட்கா பொருட்களை, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதனால் குட்கா விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
நேர்மையான அதிகாரியை பழிவாங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்