திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு பணி தீவிரம்

திருத்தணி:முருகன் கோவிலில் அடுத்த மாதம், 14ம் தேதி முதல், 18 ம் தேதி நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர்.
பெரும்பாலான பக்தர்கள் ஆட்டோ, கார், வேன், லாரி, பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவர். இதனால் மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் பற்றாக்குறையால் மலையடி வாரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்து, வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம், 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு, நீதிமன்றம் பின்புறம் உள்ள கோவில் இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும்
-
சட்டவிரோத கிட்னி கொள்ளை: உயர்நிலைக்குழு விசாரணை தேவை என்கிறார் அன்புமணி
-
கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு
-
நேர்மையான அதிகாரியை பழிவாங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி