திருப்பந்தியூர் இருளர் காலனியில் பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி

திருப்பந்தியூர்,:திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட இருளர் காலனி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பில்லாமல் வீணாகிறது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இங்குள்ள இருளர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
அசம்பாவிதம் நிகழும்முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென இருளர் காலனி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement