சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை



மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், மறப்பரை பஞ்., வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது நிதிக்குழு சுகாதார மானியம் மூலம், 78 லட்சத்து, 20,000 ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்ட, நேற்று திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வையப்பமலை மலைக்கோவிலில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பி.டி.ஓ., பாலவிநாயகம், மருத்துவர் ஆர்த்தாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement