கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது
திருவனந்தபுரம்:கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் ஜாலியாக டூர் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா அருகே கருட்டுக்காவு பகுதியில் கடந்த நான்காம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனது. இது குறித்து மூவாற்றுப்புழா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேரளாவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் கார் மாடல் மற்றும் பதிவு எண் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு வணிக வளாகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை போலீசார் ஆய்வு செய்தபோது பதிவு எண் மாற்றப்பட்டு காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. போக்குவரத்து அதிகாரியின் உதவியுடன் அந்த பதிவு எண்ணை சோதித்த போது அது போலி என்பது தெரியவந்தது.
காரில் வந்த முகம்மது அல் சாபித் என்ற இளைஞரை விசாரித்தபோது மூவாற்றுப்புழாவில் காணாமல் போன கார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அக்காரை கடத்தி தனது இன்ஸ்டாவில் அறிமுகமான காதலியுடன் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். கைது செய்யபட்ட இளைஞர் மூவாற்றுப்புழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்
-
தினமலர் செய்தி எதிரொலி: மாணவர்களை பாராட்ட நேரில் வந்தார் 'ராக்கெட்' விஞ்ஞானி!
-
படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு
-
தேடி சென்று நடிகரை சந்தித்த ரங்கசாமி; நாடி வந்த பழனிசாமியை தவிர்த்தது ஏன்?
-
வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க 'நாகம்' செயலி அறிமுகம்
-
காமராஜர் பிறந்த நாள் விழா திருமாவளவன் அன்னதானம்
-
அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...