முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனை

ராமநாதபுரம்,:போதிய மழை இல்லாததால் காய்ப்பு வெகுவாக குறைந்து முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் சந்தையில் பெரிய காய் ரூ.20 வரை விற்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி சாகுபடி குறைந்த அளவே நடப்பதால் பெரும்பாலான காய்கறிகளை மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து வாரச்சந்தை, மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் விற்கின்றனர்.

தற்போது முருங்கை மரத்தில் பூக்கள் பூத்து சீசன் துவங்கியுள்ளது. எனினும் மழையில்லாததால் காய்ப்பு குறைந்து சந்தைக்கு முருங்கைக் காய் வெளியூர்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.100 வரையும், ராமநாதபுரம் சந்தையில் சில்லரையாக ஒரு பெரிய காய் ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement