மேகமலையில் என்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மேகமலை வனப்பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், வனச்சரகர் சதிஷ்குமார் துவங்கி வைத்தனர்.
இதில் மேகமலை, ஹைவேவிஸ், மணலார், வெண்ணியார் எஸ்டேட், பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
மலைப்பகுதியில் துாய்மை பணிகள் மேற்கொண்டனர். என்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலர் நேருராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement