தமிழகத்தில் காங்கிரஸுக்கு இரு அமைச்சர்கள்: வேலுசாமி

திருச்சி: ''வரும் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் வரும். காங்., சார்பில் இரு அமைச்சர்கள் இடம் பெறுவார்கள்,'' என்று காங்., செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பேசினார்.


திருச்சி தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மணப்பாறையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்., செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பேசியதாவது:



காமராஜர் முதல்வராக இருந்தபோது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கியது வரலாறு. குஜராத்தில் கட்டப்பட்ட, 500 கோடி ரூபாய் மதிப்பிலான பாலம், சில நாட்களில் இடிந்து விழுந்தது. ஆனால் காமராஜர் கட்டிய அணை, 65 ஆண்டுகளை கடந்தும் இன்னும், ஒரு மதகு கூட உடையவில்லை. முதல்வராக இருந்த காமராஜர் சாகும்போது,
அவரிடம், 100 ரூபாய் கூட இல்லை.

வரும், 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மட்டும் தான் வரமுடியும். அதில் காங்., சார்பில் இரு அமைச்சர்கள் இருப்பார்கள். முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். பின் மத்தியில் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement