சுவாமி வீதியுலா செல்ல எதிர்ப்பு திருக்கனுார் அருகே போலீஸ் குவிப்பு

திருக்கனுார் : கைக்கிலப்பட்டில் ஒரு பிரிவினர் பகுதியில் இருந்து, மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சுவாமி வீதியுலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
திருக்கனுார் அடுத்த கைகிலப்பட்டு கிராமத்தின் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் ஒரு பிரிவினர் பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, நேற்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது.
சுவாமியை வீதியுலாவாக மற்றொரு பிரிவினர் குடியிருப்பு வழியாக கிராம எல்லைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து, சுவாமி வீதியுலாவை தடுத்து நிறுத்தியதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்த வில்லியனுார் தாசில்தார் சேகர், எஸ்.பி., வம்சிதர ரெட்டி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஒரு பிரிவினர் சுவாமி வீதியுலா பொது வழியாக கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மற்றொரு பிரிவினர் எங்களது குடியிருப்பு வழியாக விட்ட மாட்டோம் என, உறுதியாக தெரிவித்தார். இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!