பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்,45; இவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள மரவாடியில் பணியாற்றினார். நேற்று முன்தினம் காலை பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் போலீஸ் செக்போஸ்ட் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்த புருஷோத்தமன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement