ஒரே தேதியில் இரண்டு நுழைவு தேர்வு செவிலியர் மாணவர்கள் பரிதவிப்பு
புதுச்சேரி : மதர்தெேரசா, ஜிப்மர் மருத்துவ கல்லுாரி நுழைவு தேர்வு இரண்டும் ஒரே தேதியில் வருவதால் செவிலியர் மாணவர்கள் பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கோரிமேடு மதர்தெேரசா சுகாதார அறிவியல் நிலையத்தில் எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம், எம்.பி.டி., உள்ளிட்ட முதுநிலை சுகாதார படிப்புகள் உள்ளன.
இது தவிர, பி.பார்ம், பி.எஸ்சி., எம்.எல்.டி., பி.எஸ்சி., எம்.ஆர்.டி., டி.ஜி.என்.எம்., போஸ்ட் பி.எஸ்சி., லேட்ரல் படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு கடந்த 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
இளநிலை சுகாதார படிப்புக்களுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க கடந்த 7ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. எம்.எஸ்சி., போஸ்ட் பி.எஸ்சி., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செவிலியர் மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி நுழைவு தேர்வு நடக்க உள்ளது.
அதே தேதியில், ஜிப்மரின் எம்.எஸ்சி., எம்.பி.எச்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடக்க உள்ளது. இதனால், இரண்டு நுழைவு தேர்விற்கும் விண்ணப்பித்துள்ள செவிலியர் மாணவர்கள் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஏதேனும் ஒரு நுழைவு தேர்வினை எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், 'காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை ஜிப்மர் செவிலியர் நுழைவு தேர்வினை ஆன்லைனில் எழுத வேண்டும்.
அடுத்து போதிய கால அவகாசம் கூட இல்லாமல் மதர்தெேரசா சுகாதார நிலைய செவிலியர் நுழைவு தேர்வினை மதியம் 2:00 மணிக்கு நேரில் எதிர்கொள்ள வேண்டும். இதனால் கடும் நெருக்கடியில் உள்ேளாம்.
ஜிப்மர் நுழைவு தேர்விற்கு ஜூன் மாதம் 23ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை விண்ணப்பம் பெற்றப்பட்டது. 21ம் தேதி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மதர்தெரசா சுகாதார நிலையத்தில் தற்போது விண்ணப்பம் தான் வாங்கப்பட்டு வருகிறது. எனவே மதர்தெேரசா சுகாதார நிலைய செவிலியர் நுழைவு தேர்வினை நெருக்கடி இல்லாமல் எதிர்கொள்ள தள்ளி வைக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!