ஒரே மாதத்தில் வெயில் 8வது முறை சதம்

புதுச்சேரி : கோடைக்காலம் முடிந்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 101.3 டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்தது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 101.1 டிகிரியாக பதிவான வெயில், நேற்று மேலும் அதிகரித்து 101.3 டிகிரியாக பதிவானது. இந்த மாதத்திலேயே 8 முறை வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

Advertisement