காமராஜர் பிறந்த தின விழா

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் காங்., சார்பில் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழாவில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம் தங்கவேலு பாஞ்சாலி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், காங்., மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், முதல் மூன்று இடங்கள் பிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, நிதி உதவி மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக, காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அகில இந்திய மீனவர் அணி சார்பில், காங்கேயன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புமணி, வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, சூசை ராஜ், மகிலா காங்., தலைவி நிஷா, சாமிநாதன், தனபால், கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, குருமூர்த்தி கோபால்சாமி, நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement