கீரப்பாளையத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

புவனகிரி : கீரப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நேற்று துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கீரப்பாளையம், வயலுார் மற்றும் சி.மேலவன்னியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு சிறப்பு முகாம் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கலால் உதவி ஆணையர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன்,ஆனந்தன், தாசில்தார் கீதா முன்னிலை வகித்தனர். துனை பி.டி.ஓ., சபிதாரவி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சபாநாயகம், வாள்காரைமேடு பாலு, திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.

ஊராட்சி செயலாளர் தங்கமுருகவேல் நன்றி கூறினார்.

Advertisement