சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா 

விருத்தாசலம் : சத்ரபதி சிவாஜி 395வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மங்கலம்பேட்டையில், ஹிந்து முன்னணி சார்பில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஹிந்து முன்னணி பேரூராட்சி செயலாளர் தர்மா தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முத்து மணிகண்டன், ஜெயராமன், விக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சத்ரபதி சிவாஜி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். விழாவில், தட்சிணாமூர்த்தி, விக்கி, ஷாபித், கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement