விளையாட்டு உபகரணம் மாணவர்களுக்கு வழங்கல்

விருத்தாசலம் : காமராஜர் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, காமராஜர் தொண்டர்கள் பேரவை சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரராகவன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் கருணாநிதி, வைத்தியநாதன், வேதமாணிக்கம், ரஞ்சித்குமார், முத்துக்குமார், சபரிநாயகம், முதுகலை ஆசிரியர் நல்லதம்பி, சாந்தப்பன், வி.இ.டி., மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், புதுக்குப்பம் டேனிஷ்மிஷன் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement