பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

மந்தாரக்குப்பம் : ரோட்டரி கிளப் ஆப் நெய்வேலி லிக்னைட் சிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.

வீணங்கேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சந்திரமவுலி, திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

ரோட்டரி உதவி ஆளுநர் பழனிவேல், மாணவர்களுக்கு பேனா, நோட்புக் மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பால்ராஜ், ராமகிருஷ்ணன், அருள்மணி, ராம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement