நெற்பயிர்  சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நெற்பயிர் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். மரபியல் துறை பேராசிரியர் பாரதிகுமார், நெல்லில் அதிக மகசூல் தரும் நெல் ரகங்கள், விதை நேர்த்தி, கால்நடை இயற்கை உரம் மற்றும் பசுந்தாள் உரம் பயன்படுத்துவது குறித்து பேசினார்.

மேலும், நெல்லில் பயிர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை, மண்வள மேம்பாடு குறித்தும் விளக்கினார். கலைச்செல்வி, நெற்பயிரில் ஏற்படும் களை மேலாண்மை, சாகுபடி குறிப்புகள் குறித்து பேசினார்.

Advertisement