சர்வதேச அளவில் 64 பதக்கங்களை வென்று என்.எல்.சி., - சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சாதனை

நெய்வேலி : சர்வதேச அளவில் 64 பதக்கங்களை வென்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சாதனை.
சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் 64 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் இர்மிங்காம் மாகாணத்தில் கடந்த ஜூன் 30 முதல் ஜூலை 6, வரை தொடர்ந்து 6 நாட்கள் 2025 ம் ஆண்டுக்கான சர்வதேச காவல் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில் கடலுார் மாவட்டம் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்ப படை வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் உள்ளிட்ட இந்திய வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ஆறு பேர் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட 64 பதக்கங்களை வென்று சர்வதேச அளவில் 3 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.
குறிப்பாக, பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமாரி 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 100 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் கலப்பு ரிலேவில் தங்கப் பதக்கம், 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டரில் வெண்கலப் பதக்கம் என 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் சாதனை படைத்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகளை என்.எல்.சி., மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்