பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்ற ரூ.12 கோடி கோவில் நிலம் மீட்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூரில், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்த முகமது சலீம் என்பவரிடம் இருந்து மீட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநறையூரில், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 57,063 சதுர அடி இடத்தை கடந்த பல ஆண்டுகளாக, முகமது சலீம் குடும்பத்தினர் குத்தகைக்கு வைத்து இருந்தனர். குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்யாமல், சிலருக்கு அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுள்ளார். இதில் சிலர் வீடு கட்டி வந்துள்ளனர். இதையறிந்த கோவில் நிர்வாகம்,முகமது சலீமிற்கு, நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் முறையாக அவர் பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக, கோவில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க,இணை கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை துணை கமிஷனர், கும்பகோணம், உதவி கமிஷனர் ராமு அவர்கள் முன்னிலையில், கும்பகோணம், ஆலய நிலங்கள் மீட்பு தனி தாசில்தார் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், நாச்சியார்கோவில் வருவாய் ஆய்வாளர் சக்திதேவி, திருநறையூர் வி.ஏ.ஓ., தியாகராஜன் ஆகியோர், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி போட்டு, அறிவிப்பு பலகை வைத்து, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முகமது சலீம் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுக்கு முன்பு, குத்தகைக்கு எடுத்து இருந்தார். ஆனால் சமீபத்தில் கோவில் இடத்தை பிளாட் போட்டு சிலருக்கு விற்பனை செய்ததாகவும், அவர்களில் சிலர் வீடுகளை கட்டியது தெரியவந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி இடத்தை மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
'லிப்ட்' டில் சிக்கி காவலாளி பலி
-
675 வேளாண்மை அலுவலர்கள் பதவி உயர்வுக்கு காத்திருப்பு
-
யானை தந்தம் பறிமுதல் 3 பேர் கைது
-
ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை 6 பேருக்கு சி.பி.ஐ., சம்மன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன் மன்னார் வளைகுடா அதிசயம்