நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு: ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, டெங்குவால் பாதிக்கப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் புதிய படமான 'கிங்டம்' வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு படக்குழு தயாராகிவரும் நிலையில், பட ரிலீசுக்கு முன்பு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் குணமடைந்து சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்கத்தில் மே 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 'கிங்டம்' திரைப்படம், தாமதங்களை சந்தித்ததால், ஜூலை 4 ஆம் தேதிக்கும், தற்போது ஜூலை 31 ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement