கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா * காலிறுதிக்கு முன்னேற்றம்

லாஸ் வேகாஸ்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் 'நம்பர்-1' வீரர் கார்ல்சனை வீழ்த்தினார்.
'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், 5 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன் நான்காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். போட்டி லீக் முறையில் நடந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறலாம். 'ஒயிட்' பிரிவில் இடம் பெற்ற பிரக்ஞானந்தா, முதல் 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு 'டிரா' செய்தார். 4வது போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் பிரக்ஞானந்தா, 'பிரீஸ்டைல்' போட்டியில் சிறப்பாக செயல்படும், உலகின் 'நம்பர்-1', கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
7 சுற்றில் பிரக்ஞானந்தா (3 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி) 4.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை சந்திக்க உள்ளார்.
4வது இடத்துக்கான போட்டியில், அமெரிக்காவின் ஆரோனியனிடம் தோற்ற கார்ல்சன், கோப்பை வாய்ப்பை இழந்தார்.
'பிளாக்' பிரிவில் அர்ஜுன் 4.0 புள்ளியுடன் 3வது இடம் பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்திக்க உள்ளார்.
மேலும்
-
பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
-
பீஹாரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில்... 5.76 லட்சம் வாக்காளர்கள்!: 35.69 லட்சம் பேர் முகவரியில் இல்லை
-
மணல் பிரச்னையால் கொலை நடக்கவில்லை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
மதுரையில் 104 டிகிரி வெயில்
-
பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ
-
விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு