உண்ணாவிரத போராட்டம்

அவிநாசி; கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவிநாசி தெக்கலுாரில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

தெக்கலுார் கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சோமனுார், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லுார், கண்ணம்பாளையம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஒப்பந்த கூலியை அமல்படுத்தாத மற்றும் பில் வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, வரும் 23ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தெக்கலுர் பஸ் ஸ்டாப் அருகே நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மின் கட்டண உயர்வால் ஏற்பட்ட, 7.65 கோடி ரூபாயை தமிழக அரசே மானியமாக ஏற்றுக் கொண்டு, 1.65 லட்சம் விசைத்தறி இணைப்புகளுக்கு விலக்கு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கடந்த, 11 ஆண்டுகாலமாக தொடர்ந்து நீடித்துவரும் ஒப்பந்த கூலி பிரச்சனைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தருமாறு கூட்டமைப்பு சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement