எண்கள் சொல்லும் செய்தி

2.39



நடப்பாண்டின் முதல் அரையாண்டில், இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி 53 சதவீதம் அதிகரித்து, 2.39 கோடியை எட்டியுள்ளது. ஏற்றுமதிக்கான முதன்மை நாடாக 78 சதவீதத்துடன் அமெரிக்கா உள்ளது. இது கடந்தாண்டின் முதல் அரையாண்டில் 1.56 கோடியாக இருந்தது என உலகளாவிய தொழில்நுட்ப சந்தை பகுப்பாய்வு நிறுவனமான 'கேனலிஸ்' தரவுகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செக் குடியரசு, பிரிட்டன் மற்றும் ஜப்பான் சந்தைகளின் பங்கு நடப்பாண்டு 2 முதல் 4 சதவீதம் சரிந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

26,367



இந்தியாவின் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது; இருப்பினும், ஒவ்வொரு 235 மின்சார வாகனங்களுக்கு, ஒரு பொது சார்ஜிங் மையம் மட்டுமே உள்ளதாகவும் பகுப்பாய்வு நிறுவனமான 'கேர்எட்ஜ்' அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2022ல் வெறும் 5,151 மையங்கள் இருந்த நிலையில், 2023ல் 11,903 ஆகவும், 2024 இறுதியில் 25,202 ஆகவும் கணிசமாக வளர்ந்து, 2025 துவக்கத்தில் 26,367 ஐ எட்டியுள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

Advertisement